தேவாதி தேவனே (Thevehte Thevane) Lyrics
- Genre:Gospel
- Year of Release:2023
Lyrics
தேவாதி தேவனே உந்தன் அருள் தாருமே
சத்தியத்தை நாங்கள் என்றும் சொல்லவே
அன்புடைய ராஜனே எம்மை வழி நடத்துமே
உம்முடைய ராஜ்ஜியம் வருகவே
பரலோக நாதனே பரிசுத்த தேவனே
எங்கள் குறை மன்னியும் ராஜனே
வல்லமையின் தேவனே வரப்போகும் தூயவரே
எம்மை நீரே ஏற்று நடத்தும் நல்லவரே
பாவமான வாழ்வினை வாழ்ந்தது போதுமையா
பரிசுத்த வாழ்வு வாழ உதவி செய்திடும்
உந்தன் சித்தம் செய்திடும் பிள்ளைகளாய் மாற்றிடும்
உள்ளங்களை உமக்காக திறந்திடச் செய்தருளும்
பரலோக நாதனே பரிசுத்த தேவனே
எங்கள் குறை மன்னியும் ராஜனே
வல்லமையின் தேவனே வரப்போகும் தூயவரே
எம்மை நீரே ஏற்று நடத்தும் நல்லவரே
சீக்கிரம் வாருமையா இரட்சிப்பை தந்திட
உம்மோடு எம்மையும் நீர் அழைத்துச் செல்லுமே
நித்திய வாழ்வினை காணச் செய்திடும்
உமக்கே எம் வாழ்வை அர்ப்பணிக்கச் செய்திடும்
பரலோக நாதனே பரிசுத்த தேவனே
எங்கள் குறை மன்னியும் ராஜனே
வல்லமையின் தேவனே வரப்போகும் தூயவரே
எம்மை நீரே ஏற்று நடத்தும் நல்லவரே