என்னையே உம்மிடம் (ENNIYE UMMIDAM) Lyrics
- Genre:Gospel
- Year of Release:2023
Lyrics
என்னையே உம்மிடம் நான் தந்தேனே இறைவா
எப்போதும் நீரே எந்தன் தெய்வமே இறைவா
எனக்காக இரத்தத்தைச் சிந்தினீரே இறைவா
உமக்காக என்ன நான் தருவேனே இறைவா
அன்பென்ற வார்த்தையால் அகிலத்தை ஆண்டவர்
அன்பென்ற சொல்லுக்கு அடைக்கலம் கொடுததவர்
உயிரிலே கலந்து
உயிரிலே கலந்து தாகத்தைத் தீர்த்தவர்
உயிரையே ஈந்து அகிலத்தை காத்தவர்
அளிகின்ற உலகிலே ஆறுதல் தருகிறீர்
அண்டி வந்தோம் எம்மை ஆதரிததே அணைப்பீர்
தொல்லைகள் எல்லாம்
தொல்லைகள் எல்லாம் அகன்றே போய்விடும்
மன்னவன் இயேசுவே எம் வாழ்வில் வந்துவிட்டால்