Thikayathe Maname (Tamil Gospal Song) Lyrics
- Genre:Gospel
- Year of Release:2023
Lyrics
திகையாதே மனமே கலங்காதே தினமே
கர்த்தரை நிதமும் நீ துதித்திடுவாய்
எமையாளுமே எந்தன் இறைவா
அருள் தாருமே எந்தன் இறைவா
பாவத்தின் பிடியினில் இருந்து
எம்மை இரட்சித்துக் காத்தீரே நாதா
பாதாளம் செல்லாது பரலோகம் செல்ல
பலியான எந்தன் நாதா
நாம் பாதாளம் செல்லாது
பரலோகம் செல்ல பலியான எந்தன் நாதா
ஸ்தோத்திரமே ஐயா ஸ்தோத்திரமே
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
போராட்டம் நிறைந்த இவ் உலகில்
போராட பெலன் தாரும் நாதா
இயேசுவின் நாமத்தால் ஜெபிக்கின்றோம் தேவா
பொல்லாத ஆவிகள் ஓட
இயேசுவின் நாமத்தால் ஜெபிக்கின்றோம் தேவா
பொல்லாத ஆவிகள் ஓட
ஸ்தோத்திரமே ஐயா ஸ்தோத்திரமே
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா