Pirandhidumbodhu ft. Sowmya T Lyrics
- Genre:New Age
- Year of Release:2022
Lyrics
பிறந்திடும் போது மரமொன்று நடுவோம்
உன்னுடன் பிறந்தது எனச்சொல்லி வளர்ப்போம்...
பிள்ளைப் போலதை நீரூட்டி வளர்ப்போம்
ஒவ்வொரு வருடமும் உடனொன்று நடுவோம்...
வயதினை மரங்களாய் எண்ணி மகிழ்வோம்
சொந்தமாய் பந்தமாய் பெயரிட்டு முகிழ்வோம்...
உறவுக்கும் நட்புக்கும் அறிமுகம் செய்வோம்
கவிதையும் கதைகளும் பேசிக் கொள்வோம்...
மரத்துக்கும் உயிருண்டு அதனை உணர்ந்தால்
மனத்துக்குள் போற்றி நாளும் ஏற்றுவோம்...
மரத்துக்கும் வாழ்வுண்டு அதனைக் கண்டால்
மனிதரை தாண்டியும் வாழ்ந்திட வியப்போம்...
கிளைகள் மரங்களின் கைகள் என்போம்
அசைந்திடும் இலைகளை கண்கள் என்போம்...
கனிகள் மரங்களின் கருணை என்போம்
தாங்கிடும் வேர்களை கால்கள் என்போம்...
மரம்தான் மண்ணின் முதன்மைப் பிள்ளை
மழையைத் தந்திடும் வானுக்கு அன்னை...
மரம்தான் உயிரின் உயரிய எல்லை
உயிர்வரை தந்திடும் உறவுக்கு உண்மை...
மரத்துக்கும் உணர்வுண்டு அதனைப் புரிந்தால்
ஒவ்வொரு அசைவிலும் வாழ்வை காட்டும்...
மரத்துக்கும் குரலுண்டு அதனைக் கேட்டால்
மேன்மிகு இலக்கியம் அழகாய் சொல்லும்...
பூக்கள் மரங்களின் புன்னகை என்போம்
உதிரும் சருகுகள் கண்ணீர் என்போம்...
நிழல்கள் மரங்களின் நேசம் என்போம்
ஈந்திடும் காற்றை சுவாசம் என்போம்...
மரம்தான் மண்ணின் முதன்மைப் பிள்ளை
மழையைத் தந்திடும் வானுக்கு அன்னை...
மரம்தான் உயிரின் உயரிய எல்லை
உயிர்வரை தந்திடும் உறவுக்கு உண்மை...
(பிறந்திடும்...)