Anbin Aazham Lyrics
- Genre:New Age
- Year of Release:2022
Lyrics
அன்பின் ஆழமும்
அன்பின் அகலமும்
அன்பின் உயரமும்
அன்பின் நீளமும்
சிலுவையில் கண்டேன்
எதற்காக? யாருக்காக?
உணராமல் போவோர் சிலர்
புரியாமல் போவோர் பலர்
அவரன்பை உலகம் புரிந்து கொள் ளுமோ?
அவர் மீட்பை உலகம் அறிந்து கொள் ளுமோ?
நித்யஜீவன் தந்த பேரன்பு
தன் ஜீவன் தந்த உயர் அன்பு
தந்தையின் தெய்வீக வாக்குறுதி
தன் மகன் சிந்திய செங்குருதி
பாவம் எனும் தடுப்புச்சுவர் எங்கே?
கிழிந்த திரைச்சீலை எங்கே?
சாவை வென்ற தருணம்
நாதனே நமக்கு ஆரோகணம்
அன்பின் ஆழமும்
அன்பின் அகலமும்
அன்பின் உயரமும்
அன்பின் நீளமும்
சிலுவையில் கண்டேன்
எதற்காக? யாருக்காக?