
Sooriyathevan ft. Ammu Ranjithkumar & Livimusic Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2024
Lyrics
வல்வெட்டிவீரனே
தமிழினத்தின் தலைவனே - புலிமறவனே
அவர் ஒரு காலடியே போதும்
இந்த உலகமே வியந்து பார்க்கும்
தலைவன் பிறந்தான் வரிப்புலி படைத்தான்
தமிழர் நிமிர்ந்தோம் செருக்களம் சென்றோம்
சினங்கொள் தமிழா இழிநிலை கண்டு!
சீறிப் பாய்ந்திடு தாய்ப்புலி வழி நின்று!
மேகக்கரையில கடலலையில
தேசத்தரையில நடந்தோமே (நடந்தோமே)
வான்படையினை கடற்படையினை
தரைபடையினை கண்டோமே (கண்டோமே)
பதினாறில பதறாதவன் பிரபாகரன்
வழிகாட்டலில் ஆன படை
கரிகாலனின் செயல்வீச்சில உருவான எங்கள்
தமிழ்த்தேசத்தின் புலிப்படை
சூரியத்தேவன் நம் பிரபாகரன்
பகையை விரட்டிய தீரன்
இளையோர் கடமை உரைத்து நின்றான்
தமிழீழ மீட்பே இலக்கு என்றான்
சூரியத்தேவன் நம் பிரபாகரன்
பகையை விரட்டிய தீரன்
இளையோர் கடமை உரைத்து நின்றான்
தமிழீழ மீட்பே இலக்கு என்றான்
சொல்லும் செயலும் ஒன்றென்றான்
வெல்லும் வழியும் சொல்லி விட்டான்
அன்பால் ஆளும் - மனதினை கொண்டவன்
தமிழ் வீரத்தை தரணிக்கு சொன்னவன்
சரித்திரத்தில் எவனும் இல்லை
இனிமேல் எங்கும் பிறப்பதும் இல்லை
தலைவன் ஒருவனே அவன் தனி ஒருவன் - எம்
மண்ணை மீட்கவந்த
மாமன்னன்
வரலாறு அவர் வழிகாட்டி - அவரது
பிரபாகரம் எம் வழிகாட்டி
வார்த்தை தேவையில்லையே அந்த
பார்வை மட்டும் பேசுமே
அறிவிலும், மனதிலும், உறவிலும்
உடல் நலத்திலும் உச்சத்தில் நிற்பவன்
அதைப் போர்க்களத்தில், தன்வாழ்வில்,
சிந்தனையில் மெய்ப்பித்து காட்டியவன்
குழந்தைகள் மீது பாசம் பெரிது
சொல்லுக்கு முன் உன் செயலில் காட்டு
புலிகளின் நெஞ்சிலே விதைத்த வரி
"நீ செய் அல்லது செத்துமடி"
சூரியத்தேவன் நம் பிரபாகரன்
பகையை விரட்டிய தீரன்
இளையோர் கடமை உரைத்து நின்றான்
விடுதலை எம் கையில் ஒப்படைத்தான்
சூரியதேவன் நம் பிரபாகரன்
பகையை விரட்டிய தீரன்
இளையோர் கடமை உரைத்து நின்றான்
விடுதலை எம் கையில் ஒப்படைத்தான்
சொல்லும் செயலும் ஒன்றென்றான்
வெல்லும் வழியும் சொல்லி விட்டான்
சிந்தையும் செயலும் சூரியத்தேவன்
எம் தேசியத்தலைவன்
பிரபாகரன் பிரபாகரன் பிரபாகரன்…
மேகக்கரையில கடலலையில
தேசத்தரையில நடந்தோமே
வான்படையினை கடற்படையினை
தரைபடையினை கண்டோமே
சரித்திரத்தில் எவனும் இல்லை
இனிமேல் எங்கும் பிறப்பதும் இல்லை
தலைவன் ஒருவன் அவன் தனி ஒருவன்
எம் மண்ணை மீட்க வந்த மாமன்னன்
சூரியத்தேவன் நம் பிரபாகரன்
பகையை விரட்டிய தீரன்
இளையோர் கடமை உரைத்து நின்றான்
விடுதலை எம் கையில் ஒப்படைத்தான்
சூரியத்தேவன் நம் பிரபாகரன்
பகையை விரட்டிய தீரன்
இளையோர் கடமை உரைத்து நின்றான்
விடுதலை எம் கையில் ஒப்படைத்தான்