Um Valakkaram Lyrics
- Genre:Gospel
- Year of Release:2024
Lyrics
ஜெகோவா ஏலோகீம்
எங்கெங்கும் உள்ளவரே
எந்நாளும் ஆள்பவரே
உம் வலக்கரம் மூடிடுதே
தேவ பிரசன்னம் நிரப்பிடுதே
அபிஷேகம் இரங்கிடுதே
அக்கினியாய் மாறிடுதே
கன்மலை மறைவினில்
அழைத்து சென்று
கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்
நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்
மெழுகைப்போல் உருகச்செய்யும்
செட்டையின் நிழல்தனில் அமரச்செய்து
உமது அன்பை உணரச் செய்யும்
புது வல்லமை பெலன் என்னில் தந்து
இன்னும் உமக்காய் எழும்பச்செய்யும்