
Identity Matter Illa (LGBTQ Song) ft. RJ Prasath, Dinesh & Amala mohan Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2024
Lyrics
ஹே புதிதாய் புதிதாய்ப்
புத்தம் புதிதாய்
நித்தம் விடியும்
புத்தம் புது உலகம்
அறிவாய் புரிவாய் விசயங்களை
அறிவை வைத்து கொண்டு
பண்ணு கலகம்
ஹே புதிதாய் புதிதாய்ப்
புத்தம் புதிதாய்
நித்தம் விடியும்
புத்தம் புது உலகம்
அறிவாய் புரிவாய் விசயங்களை
அறிவை வைத்து கொண்டு
பண்ணு கலகம்
ஹே சாமி என்ன சொன்னா என்ன ?
சாமியாரும் சொன்னா என்ன?
பாவி என்று சொன்னா என்ன ?
பாவம் பாவம் என்றால் என்ன ?
யாரு என்ன சொன்னா என்ன ?
யாருக்காவும் மாத்திக்காத
ஊரு என்ன சொன்னா என்ன
உள்ள போயி பூட்டிக்காத
கட்டளையிடுவது யார் ?
உன்னை கட்டியணைக்க
விரல் பிடிக்க
கட்டுக்குள் அடங்கிவிடுமா
காதல்தீ பிடிக்க
நீ படிக்க
கட்டளையிடுவது யார் ?
உன்னை கட்டியணைக்க
விரல் பிடிக்க
கட்டுக்குள் அடங்கிவிடுமா
காதல்தீ பிடிக்க
நீ படிக்க
பல விசயங்கள் இருக்குது
பருந்து பார்வையில
உலகத்தை பாக்க நீயும்
முயன்று பார்க்கையில
பத்திரப்படுத்தி வச்சிருக்க பழமையை
விட்டுட்டு வெளிய வந்து
உச்சரி நீ புதுமையை
புதுசா ஒன்னுமில்ல கண்ணு
ரொம்ப காலமா இருக்குது மண்ணில்
புதுசா ஒன்னுமில்ல கண்ணு
ரொம்ப காலமா இருக்குது மண்ணில்
தினுசா பாக்கையில தூரமா இருக்குது
வேகமா புரிஞ்சுக்க
மாற்றங்கள் நடக்குது
பாலினம் என்பது
இயற்கையில் இருப்பது
பூட்டப்பட்ட மனித
மூளைதான் மறுக்குது
தினுசா பாக்கையில தூரமா இருக்குது
வேகமா புரிஞ்சுக்க
மாற்றங்கள் நடக்குது
பாலினம் என்பது
இயற்கையில் இருப்பது
பூட்டப்பட்ட மனித
மூளைதான் மறுக்குது
நான் யார்? நீ யார் ? நாம் யார் ? யார் யார்
எல்லாம் வெறும் அடையாளம்
ஆண்பால் பெண்பால் புதுபால் பலபால்
எல்லாம் உயிரியல் பிரிவாகும்
ஆணிலும் பெண்மை பெண்ணிலும் ஆண்மை
இருப்பது அறிவியல் உண்மையடா
அடையாளம் கழிஅறிவியல்
வழி சென்றால் அன்பே கிடைக்குமடா
இத கண்டுபுடிச்சேன் நான் கஷ்டப்பட்டு
நீ அடையாளங்களுக்குள்ள சிக்கிக்கிட்டே
இத்துப்போயி செத்துபோயிடாத மாமே
உன் கட்டுக்குள்ள அடங்காது காதல்மாமே
பச்சப்புள்ள வளக்குற
பத்திரமா இருக்குற
பெத்தவங்க எல்லாருக்கும் சொல்லிக்கிறேன்
உங்க சட்டப்படி இஷ்டப்படி குழந்தையை வளர்ப்பதே
தப்புத்தாண்டா இயற்கையின் முறைப் படி
தோல் நிறம் பாலினம் இவை யாவையும் கட
உலகினை வெல்லும் வினைபுரிந்திட
உன் சிந்தையில் இருக்கும் சிறைகளை உடை
மகிழ்ச்சியாய் வாழலாம் வா வாழ்ந்திட
நீ விடிஞ்சு எழுந்து
தூக்கம் களைஞ்சி
அடிச்சி புடிச்சி
அலைஞ்சு ஓடி
சிறகை விரித்து
பறவை பறந்து
செல்லும் வழிகள்
போவோம் நாடி
ஒன்று கூடி
பாட்டு பாடி
ஆட்டம் போட்டு
ஓடி வா நீ
ஊர மறந்து
பெயரை மறந்து
உன்ன மறந்து
என்ன மறந்து
காதல் கலக்க
ஆயுள் முழுக்க
அன்பு சுரக்க
கூடி இருக்க
கால்கள் நடக்க
பாதை இருக்க
பயணம் முடிக்க
தயக்கம் என்ன
தயங்கி நின்றால் நடக்காது
தரிசு நிலமோ செழிக்காது
Identity Metter இல்ல
அன்புக்கு பால் பேதமில்ல
Identity Metter இல்ல
அன்புக்கு பால் பேதமில்ல
Identity Metter இல்ல
அன்புக்கு பால் பேதமில்ல
Identity Metter இல்ல
அன்புக்கு பால் பேதமில்ல
Identity Metter இல்ல
அன்புக்கு பால் பேதமில்ல
Identity Metter இல்ல
அன்புக்கு பால் பேதமில்ல
Identity Metter இல்ல
அன்புக்கு பால் பேதமில்ல
Identity Metter இல்ல
அன்புக்கு பால் பேதமில்ல
Identity Metter இல்ல
அன்புக்கு பால் பேதமில்ல