
Thoorale ft. Smith Asher & Mahi SR Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
மழை தூறிடும் ஓவியமாக
ஒளித்தூரிகை வானிலும் கீற
உதிரும் உலகே
அழகின் துகளே
விழி பேசிடும் வார்த்தைகள் மெல்ல
மொழி நாணிடும் பார்த்ததை சொல்ல
இதழ் மேல் இதழே
மகரந்த மலரே
கண்ணெதிர் கனவே
கரங்களில் கணமே
கவிந்திடும் பொழுதே - ஓகோ
வெண்ணிறவொளியே
உன்னுடல் தொடவே
மின்னிடும் அழகே- நீ
என் நிலவடியே..
கண்ணோடு காணும் யாவுமே - உன்
கை கோர்த்து காண தோணுதே
மெய் சேர்ந்து போகும் பாதை சேர்ந்து நீளவே..
உலகதன் காதல் யாவுமே
உனக்கென நானும் சேர்க்கவே
உன் சாயல் பார்த்து நானும் எங்கும்
தோற்கவே..
தூறலில் தோன்றிடும் வானவில்லே
மாமழை மீதுன்னை காணலையே
வாழ்ந்திடும் காலமும் காதலிலே
தூறிடவே...
மெய் சேர நீளும் பாதையே
கண்ணீரும் காண நேருமே
என்றாலும் தேடும் காதல் மீறும்
யாவுமே….
மண் மீது வீழும் தூறலே
வான் மீது ஏறும் போதிலே
போகட்டும் நாளும் இந்த வானும்
தூறவே....