Ulagalum Umaiyavale Lyrics
- Genre:Soundtrack
- Year of Release:2023
Lyrics
உலகாளும் உமையவளே
உத்தமியே மாரியம்மா
உருகாதா மனசுனக்கு
உன்ன விட்டா யாரம்மா
வெட்டி வெச்ச குளமாக
உப்புத் தண்ணி ஊறுதம்மா
கண்ண விட்டு சிந்துதடி
பக்கம் வந்து பாரம்மா
கண்ணுனக்கு ஆயிரமாம்
எத்தனையோ கோபுரமாம்
மண்ணுக்கொரு வடிவான
மகமாயி தாயம்மா
உன்னை யறிந்தவர் அழலாமா
உன்னடி வந்தவர் விழலாமா
அன்னையும் என்னை மறந்தாயா
சொல்லடி இதுவோ முறைதானா
பெத்தவளே பெரியவளே
ஒத்த நொடி உன் பார்வை
பாவி திசை பாராதா - என்
வேதனையும் தீராதா
வாயறியா விலங் கதுக்கும்
நல்லதொரு கதை யிருக்கும்
நான் கெடக்கும் நிலையிருக்கே
நாய் பேயும் அத வெறுக்கும்
பூமியில நான் பொறந்த
நாள் தவறா, கோள் தவறா
நாதி யத்து நிக்கறனே - உன்ன
நம்பியதும் என் தவறா
உன்னை யறிந்தவர் அழலாமா
உன்னடி வந்தவர் விழலாமா
அன்னையும் என்னை மறந்தாயா
சொல்லடி இதுவோ முறைதானா
காலமெல்லாம் செஞ்சு வெச்ச
பூசை யேதும் சேரலையோ
காளியம்மா நான் அடஞ்ச
புண்ணியமும் போதலையோ
தாயி குணம் தங்க குணம்
தூய முகம் கோடி வரம்
நாடி வரும் ஏழை சனம்
காத்திடவே நீ வரணும்
நான் படிச்ச பாட்டிதிலே
நான் துடிச்ச வலியிருக்கும்
நீ படைச்ச நாட்டினிலே
நான் வாழ வழியில்லயா
உலகாளும் உமையவளே
உத்தமியே மாரியம்மா
உருகாதா மனசுனக்கு
உன்ன விட்டா யாரம்மா