Graceful Devotion: Arul Nirai Mariye Song in the Melodious Album Mariye Vazhga! Mariye Vazhga! (Long Live Mary!) in Tamil! (Singer Gayathri) Lyrics
- Genre:Gospel
- Year of Release:2023
Lyrics
மரியே வாழ்க! மரியே வாழ்க!
மாதா என் தாயே வாழ்க!
மரியே வாழ்க! மரியே வாழ்க!
இறைவனின் அன்னை வாழ்க!
அருள் நிறை மரியே! கருணையின் வடிவே!
தேவமைந்தனின் அன்னையே!- (எங்கள்)
அருள் நிறை மரியே! கருணையின் வடிவே!
தேவமைந்தனின் அன்னையே!
அனுதினமும் உனை நான் நினைத்தேன் தொழுதேன்.
கரம் பிடித்து நடத்துவீர் என்னை கரம் பிடித்து நடத்துவீர்

பெண்களில் நீர் தான் தூயவர் என்று,
அறிந்திட்ட குழந்தை ஏசு உன் மடியில் தவழ்ந்தார்.
எங்களுக்காக மன்றாடும் தாயே!
பரிந்துரையாள் என்றும் நாங்கள் வாழ்கிறோம்.
பாவ இருளும் சூழும் நாட்களில்
அருள் வேண்டி நாங்கள் வாழ்கிறோம்.
நோயும் இடறும் சூழும் நாட்களில் உன் நலம் வேண்டி நாங்கள் ஜெபிக்கிறோம்.
மரியே நீர் வாழ்கவே!
அருள் நிறை மரியே! கருணையின் வடிவே!
தேவமைந்தனின் அன்னையே!
அனுதினமும் உனை நான் நினைத்தேன் தொழுதேன்.
கரம் பிடித்து நடத்துவீர் என்னை கரம் பிடித்து நடத்துவீர்
அருள் நிறை மரியே! கருணையின் வடிவே!
தேவமைந்தனின் அன்னையே!
அருள் நிறை மரியே! கருணையின் வடிவே!
தேவமைந்தனின் அன்னையே!
மரியே வாழ்க! மரியே வாழ்க!
இறைவனின் அன்னை வாழ்க!
அன்பின் அன்னை நீயே! ஆரோக்கிய தாயே!
அல்லல் படுவோரின் அமுத சுரபியே - 2
துன்பம் தீர்க்கும் தாயே!
துணை வேண்டும் நீயே!
பிள்ளை என்னை காக்க வேண்டும் தாயே நீ!
அன்பே! அமுதே! அருளே! அழகே! நீ
மண்ணோர் விண்ணோர் போற்றும் தாய் மரி
குறைகள் கேட்கும் வளசை தாய் மரி
வளமே சேர்க்கும் வளசை மா மரி
வாழ்க! வாழ்க! தாய் மரி.