Mudhal Kadhale Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
என் வாழ்வில் உள்ள
சுவடின் மையாய்
நீ இருக்கிறாய்
வண்ணம் தீட்ட
பல இரவு தொலைத்து
எனை பேணிக் காத்து
சிகரம் கடக்க
நீ துணை நிற்கிறாய்
ஒரு படகினை போன்று
நானும் வீழ்ந்தாலோ
உன் அன்பால் என்றும்
எனை மிதக்க செய்கிறாய்
கிளிகளின் ஓசையில்
தவழும் மழைத்துளி போலே
என்மேலே படர்ந்து
சுவாசமாகி ஒருவம் தருகிறாய்
விழித்திருக்கும் தருணம்
முதலென உன்னை
மட்டுமே நேசிக்கிறேன்
உன்னுடைய அன்பை
வர்ணிக்க வார்த்தைகள்
ஆயிரம் கோர்க்கிறேன்
என் மழலை மொழியின்
முதல் வார்த்தை நீ
ஒவ்வொரு வலியிலும்
கூறிய வார்த்தை நீ
ஆழி சூழ்ந்த இவ்வுலகில்
கரம் பிடித்த
நடந்த நாட்களும்
முதல் காதலே முதல் காதலே
என்றும் நீ எனது முதல் காதலே
முதல் காதலே முதல் காதலே
என்றும் நீ எனது முதல் காதலே
பாரம் சூழ்ந்த
இவ்வுலகில் உனைக்
கண்டால் நகைக்குறேன்
தொடுவானம் போல்
படந்திருக்கும் நீயும்
உனது காதலும் பூந்தரகையே
பூந்தரகையே பூந்தரகையே
முதல் காதலே முதல் காதலே
என்றும் நீ எனது முதல் காதலே
முதல் காதலே முதல் காதலே
என்றும் நீ எனது முதல் காதலே