Chennai Paadal Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2014
Lyrics
கர்ணனுக்கு யார் செஞ்ச குற்றமோ
இங்க வெய்யில் கொடுமையா அடிக்குது
நிழல தேடி மரத்தடியில ஒளிஞ்சா
அங்க கரும்பு சாரும் இஞ்சி மோரும் கிடைக்குது
போர் அடிச்சு பீச்சு போயி நடந்தா
அங்க மாங்காயும் மிளகா தூளும் விக்குது
எரிச்ச சோளம்
உப்பன்னாசி
தர்பூசணி
மிளகாய் பஜ்ஜி
பழுத்த மாம்பழம்
கடல பொரி
இதுக்கு மேல
என்ன வொர்ரி வொர்ரி வொர்ரி
இந்திரனுக்கு யார் மேல கோவமோ
இடியும் மழையும் இங்க ரோட எல்லாம் கிழிக்குது
பிளாஸ்டிக் பை தொப்பி ஜனம் எல்லாம்
நனையாம வீடு திரும்ப துடிக்குது
கார்பரேசன் குப்ப தொட்டிக்குள்ள
பசு மாடும் கன்னுக்குட்டியும் மேயுது
டீ கடையில பன்னு தின்னும் ஆள
தெரு நாய் கூட்டம் எல்லாம் ஏக்கத்தோடு பாக்குது
இந்த ஊரு இப்படி தான் மாமா
வேர்த்தா தொடச்சுக்க
பேஞ்சா ஒளிஞ்சிக்க
பாத்து பாத்து கோவம் வரும் போது
பல்ல கடிச்சுக்க மெல்ல சிரிச்சுக்க