
Julai Kaatrill ft. Rakshita Suresh & S.Nilaani Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2022
Lyrics
ஜூலை காற்றில்
பிறந்த தேவனைப் பார்த்தேன்
விடிகாலை வானில்
வரைந்த வானவில் பார்த்தேன்
சதிராடிடும் அழகா பூவோடுதான் புயலா
திமிரோடுஎனை தொடும் உந்தன் கைகள்
நீ இடைக்கிடை என் சாமக் கனாக்களில்
நீ ஒரேவிடை என் நெஞ்ச வினாக்களின்
நீ விதைத்த காதல் என் வனத்தில்
நீ சுவைத்த பாடல் என் உதட்டில்
ஈரேழு தேசம் என்கையில் தந்தாய்
நீராடும்போதும் தீயாக வந்தாய்
உன் இதழ்களில் என் ஆயுள் கரைந்ததே
உன் வியர்வையில் என்தேகம் நனைந்ததே
சேலை சூடும் நிலாவை
சாலையில் பார்த்தேன்
தாரே நானே நா
விடிகாலை வானில்
உலாவும் ஆதவன் பார்த்தேன்
ஓர் தொடர்கதையென நீயெனைப் படித்தாய்
ஓர் விடுகதையென ஏன் எனை அணைத்தாய்
ஏதேதோ மாற்றம் என்னுள்ளே உன்னால்
தேனூறும் தேகம் பன்னீரில் பாகம்
என் வளர்பிறை உன் மேகம் வளர்த்ததே
உன் இளம்பிறை என் மோகம் வளர்த்ததே
ஜூலை காற்றில் பிறந்த
தேவனைப் பார்த்தேன்
விடிகாலை வானில்
உலாவும் ஆதவன் பார்த்தேன்
சதிராடிடும் அழகே
பூவோடுதான் புயலேன்
திமிரோடுஎனை தொடும் உந்தன் கைகள்
நீ இடைக்கிடை என் சாமக் கனாக்களில்
நீ ஒரேவிடை என் நெஞ்ச வினாக்களின்
ம் ம் ம் ம் ம் ம் ம்