
Kalla Vinayagar Pathigam | கள்ள விநாயகர் பதிகம் Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
பங்கயத் தாளும் ஒருநான்கு தோளும் படாமுகமும்
திங்களின் கோடும் வளர்மோ தகத்துடன் செங்கையிலே
அங்குச பாசமு மாகிவந்(து) என்றனை ஆண்டருள்வாய்;
வெங்கய மே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒருதொழிலைப்
பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும்நின் பாதத்திலே
நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ?
விண்ணும் புகழ்கட வூர்வாழும் கள்ள விநாயகனே!
யாதொன்றை யாகிலும் எண்ணிய போ(து) உன் இணைக்கமல்
பாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ?
பேதம் தெரிந்த மறையோர் தமது பெருச்தெருவில்
வேதம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!
அரனென் பவனையும் அம்புயத் தோனையும் ஆழிசங்கு
கரனென் பவனையுங் கைதொழ வேண்டி உன் கால்தொழுவார்
இரவும் பகலும் இயலிசை நாடக மென்னும் நன்னூல்
விரவுந் தமிழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!
துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர்தமை
மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து
கதியே தரும்வழி காட்டிடுவாய்; நின் கருணையினால்
விதியே புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!
நாக ந்துரகம் பலபணி அடை நவநிதிகள்
பாகஞ்சு மென்மொழியாள் போகமும் உன்றன் பாதமதில்
மோகந் திகழப் பணிந்தோர்க்(கு) அலாமல் முயன்றிடுமோ?
மேகம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!
இளங்குஞ் சரச்செழுங் கன்றே! எனச்சொலி ஏத்திநின்றாய்
உளங்கசிந் தங்கையால் குட்டிக்கொண் டோர்க்கோர் குறையுமுண்டோ?
வளங்கொண்ட மூவர் தமைமறித் தேதமிழ் மாலைகொண்டு
விளங்கும் புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!
தண்டாயுதத்தையும் சூலாயுதத்தையும் தாங்கியென்னைக்
கண்டாவிகொள்ள நான் வரும் வேளையில் காத்திடுவாய்
வண்டாரவாரஞ்செய் மாமலர்ச்சோலை வளப்பமுடன்
விண்தாவிய கடவூர் வாழும் கள்ள விநாயகனே
மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்திமுந்தித்
தாவரும் நெற்றியில் தாக்கியுன் நாமத்தைச் சாற்றிடுவார்;
தேவரும் போற்றிய தேவே! உனையன்றித் தெய்வமுண்டோ?
மேவருஞ் சீர்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!
மைப்பொரு வாரண மாமுக மீதினில் வாய்ந்ததுதிக்
கைப்பொரு ளே! என்று கைதொழு வோர்குன் கருணைவைப்பாய்;
பொய்ப்பணி யோஅறி யாதமு தீசன் புகழுமெங்கள்
மெய்ப்பொரு ளே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே!