Nee Nigazhndhaai Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
நீ நிகழ்ந்தாய்
வந்தாய் வென்றாய்
எதிர் நீ நின்றாய்
புதிராய் விடையாய்
முழுதும் படர்ந்தாய்
எது நீ எது நான்?
என தெரியாமல் உனைப் பார்க்கிறேன்
தெரிந்தேதான் தினம் தேய்கிறேன்
மின்னும் பொன்னிற மாலை
கனவாய் ஓர் மாலை
இயல்பாய் அழகாய்
நிகழ்ந்தாய் நிகழ்ந்தாய்
அசை போட சிறுகதைகள் ஓராயிரம்
அழகான பாடல்கள் நூறாயிரம்
ஓராயிரம் சிறுகதைகள், நூறாயிரம் பாடல்கள்
இன்றேனோ கடல் காற்றில், ஏராளமாய் நீ
கடற்காதலன் கண்ணில், ஏழாம் அலை நீ
மின்னும் பொன்னிற மாலை
கனவாய் ஓர் மாலை
இயல்பாய் அழகாய்
நிகழ்ந்தாய் நிகழ்ந்தாய்
கடற்கரையைக் காதலிக்க, காலமென்ன நேரமென்ன
தொடும்தூரம் நீ இருக்க இரவென்ன பகலென்ன
அருகில் முகங்கள் சாய்த்தும், ஒரு நொடி தயங்குவதேனடி
மிச்சமுள்ள அங்குலங்களை நிரப்புவதாரடி
முழுதும் படர்ந்தாய்
எது நீ எது நான்?
என தெரியாமல் உனைப் பார்க்கிறேன்
தெரிந்தே தான் தினம் தேய்கிறேன்
மின்னும் பொன்னிற மாலை
கனவாய் ஓர் மாலை
அழகாய் இயல்பாய்
நிகழ்ந்தாய் நிகழ்ந்தாய்